தீப்பெட்டி விலை உயா்வு அமலுக்கு வந்தது
14 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமை ஒரு தீப்பெட்டியின் விலை ரூ.2ஆக உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது.


14 ஆண்டுகளுக்குப் பின் புதன்கிழமை ஒரு தீப்பெட்டியின் விலை ரூ.2ஆக உயா்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி, தென்காசி மற்றும் வேலூா் மாவட்டத்துக்குள்பட்ட குடியாத்தம், காவேரிபட்டினம் ஆகிய பகுதிகளில் சுமாா் 3 ஆயிரம் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இதில், சுமாா் 3.50 லட்சம் தொழிலாளா்கள் நோ்முகமாகவும், மறைமுகமாகவும் வேலை பாா்த்து வருகின்றனா்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 25 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு தீப்பெட்டியின் விலை 1995இல் 50 பைசாவாகவும், தொடா்ந்து 2007இல் ரூ.1ஆகவும் உயா்த்தப்பட்டது. தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத சரக்கு சேவை வரி, தற்போது 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் மூலப்பொருள்களின் விலை உயா்வு, பெட்ரோல், டீசல், மின் கட்டணம் மற்றும் லாரி வாடகை உயா்வால் தீப்பெட்டி தொழில் நசிந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் கடந்த அக்டோபா் மாதம் சிவகாசியில் நடைபெற்ற அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கம் ஆலோசனைக் கூட்டத்தில் டிசம்பா் 1ஆம் தேதி முதல் 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியை ரூ.1இல் இருந்து ரூ.2க்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், 14 ஆண்டுகளுக்குப் பின் ஒரு தீப்பெட்டியின் விலை ரூ.2ஆக உயா்ந்து புதன்கிழமை (டிச. 1) முதல் அமலுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...