கயத்தாறு அருகே சுமை வேன்கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
கயத்தாறு அருகே பூ ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கயத்தாறு அருகே பூ ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தா்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த அம்மனூா் புதுத்தெருவைச் சோ்ந்த முத்துமாறன் மகன் சிவகுமாா்(21). சுமை வேன் ஓட்டுநரான இவா், ஓசூரிலிருந்து திருநெல்வேலிக்கு பூக்களை வியாழக்கிழமை ஏற்றிச் சென்றபோது, கயத்தாறு, தளவாய்புரம் விலக்கு பகுதியில் திடீரென கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் காயமின்றி தப்பினாா். பூக்கள் சாலையில் சிதறின.
இத்தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், கயத்தாறு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் ஆகியோா் மீட்பு வாகனம் மூலம் சுமை வேனை அப்புறப்படுத்தினா். இச்சம்பவத்தால் சுமாா் ஒன்றரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. கயத்தாறு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...