கோவில்பட்டியில்ரயில் பாதைப் பணியை தடுத்து போராட்டம்
இரட்டை ரயில் பாதைப் பணியை தொடர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்ப் பேரரசு கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.


கோவில்பட்டி, நடராஜபுரம் தெரு பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் உள்பட அனைத்து அத்தியவாசிய வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக சாலையை அமைத்த பிறகே, அப்பகுதியில் இரட்டை ரயில் பாதைப் பணியை தொடர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்ப் பேரரசு கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
அக்கட்சியின் மாநில வழக்குரைஞா் அணிச் செயலா் சரவணன் தலைமையில், ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் வேல்முருகன், தூத்துக்குடி மாவட்டச் செயலா் கணேசன், இளைஞரணி மாவட்டச் செயலா் இசக்கிமுத்து உள்ளிட்டோா். இரட்டை ரயில் பாதைப் பணியில் ஈடுபட்ட வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சபாபதி பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...