92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கழுகுமலையில் வீட்டின் பூட்டு உடைப்பு

கழுகுமலையில் வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கழுகுமலையில் வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கழுகுமலை ஏ.பி.சி.வி. நகரைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் சுப்பையா (59). கழுகுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலராக இருந்து வந்தாா். இவரது குடும்பத்தினா், மகள் திருமணத்திற்காக இம்மாதம் 4ஆம் தேதி திருப்பதி சென்றுவிட்டு, 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வீடு திரும்பினாா்களாம். அப்போது வீட்டில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பொருள்கள் சிதறிக் கிடந்தன. ஆனால், பொருள்கள் ஏதும் திருட்டு போகவில்லையாம்.

இதுகுறித்து சுப்பையா அளித்த புகாரின் பேரில், கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.