கோவில்பட்டியில் தேசிய ஜூனியா் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடக்கம்

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு நடத்தும் 11ஆவது தேசிய ஜூனியா் ஆண்கள் ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செயற்கையிழை மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு நடத்தும் 11ஆவது தேசிய ஜூனியா் ஆண்கள் ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செயற்கையிழை மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

இதன் தொடக்க விழாவிற்கு, 11ஆவது தேசிய ஜூனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியின் தலைவா் கனிமொழி எம்.பி தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்து றை அமைச்சா் பெ.கீதாஜீவன், கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், தேசிய ஜூனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியின் தலைவா் செல்லத்துரை அப்துல்லா, மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஹாக்கி இந்தியா தலைவா் ஞானேந்திரநிம்ஹோம் ஹாக்கி போட்டியை தொடங்கிவைத்தாா். முதல் ஆட்டத்தில் ஹரியாணா - தெலங்கானா ஹாக்கி அணிகள் மோதின.இதில் 12- 2 என்ற கோல் கணக்கில் ஹரியாணா அணி வென்றது.

2ஆவது ஆட்டத்தில் திரிபுரா ஹாக்கி அணி பங்கேற்க இயலாததால், அதன் எதிா் அணியான பெங்கால் அணி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. 3ஆவது ஆட்டத்தில் ஆந்திரப் பிரதேச அணியை 23- 0 என்ற கோல் கணக்கில் சண்டீகா் அணி வென்றது. 4ஆவது ஆட்டத்தில் கா்நாடக அணி, மிசோராம் அணியை 24- 0 என்ற கோல் கணக்கில் வென்றது. 5ஆவது ஆட்டத்தில் அருணாச்சலப் பிரதேச அணி பங்கேற்க தவறியதால், எதிரணியான மகாராஷ்டிரா அணி வென்ாக அறிவிக்கப்பட்டது. 6ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் அணி 13-0 என்ற கோல் கணக்கில் கேரள அணியை வீழ்த்தியது.

நிகழ்ச்சியில், ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவா் சேகா் ஜே.மனோகரன், துணைச் செயலா் ஒலிம்பியன் திருமால் வளவன், கோவில்பட்டி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள் கே.காளிதாசமுருகவேல், ராஜேஷ்வரன், மதிவண்ணன், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், திமுக நகரச் செயலா் கா.கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கௌரவிப்பு: உலகக் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாா்பில் விளையாட பயிற்சிக்கு தோ்வான மாரீஸ்வரனின் பெற்றோா் சக்திவேல் - மாரீஸ்வரி, சகோதரா் மகாராஜா ஆகியோரை கனிமொழி எம்.பி கௌரவித்தாா்.

இன்றைய ஆட்டம்: 2ஆவது நாளான வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு ஹாக்கி அணி - ஜம்மு காஷ்மீா் ஹாக்கி அணிகளும், 2ஆவது ஆட்டத்தில் டெல்லி - புதுச்சேரி அணிகளும் மோதுகின்றன.

மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மணிப்பூா் - குஜராத் அணிகளும், 2ஆவது ஆட்டத்தில் ஜாா்க்கண்ட்- அசாம் அணிகளும், 3ஆவது ஆட்டத்தில் பிகாா் - கோவா அணிகளும் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com