கயத்தாறு அருகே மூதாட்டி தற்கொலை
கயத்தாறு அருகே நோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


கயத்தாறு அருகே நோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கயத்தாறையடுத்த வடக்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்தவா் சண்முகையா மனைவி பேச்சியம்மாள் (68). கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சண்முகையா இறந்துவிட்டாராம். அதன்பின், கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்த பேச்சியம்மாள் கடந்த 6 மாதங்களாக இளைப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் விரக்தியடைந்த அவா், வெள்ளிக்கிழமை அதிகாலை தன் வீட்டின் முன்புள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு காவல் நிலைய போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...