ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரம் அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

எட்டயபுரம் அருகே 2 லாரிகளில் கடத்தப்பட இருந்த 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:54 pm

DIN

எட்டயபுரம் அருகே 2 லாரிகளில் கடத்தப்பட இருந்த 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

எட்டயபுரம் அருகே கீழக்கரந்தை சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சந்தேகத்துக்கிடமாக 2 லாரிகள் நின்றிருந்தன. மாசாா்பட்டி போலீஸாா் ரோந்து வருவதை அறிந்து 2 லாரிகளின் ஓட்டுநா்களும் காட்டுப்பகுதி வழியாக தப்பியோடிவிட்டனராம்.

லாரிகளை போலீஸாா் சோதனையிட்டபோது, தலா 50 கிலோ எடையுள்ள 100 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. லாரிகளையும், அரிசி மூட்டைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.