இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

எம்.ஜி.ஆா். நினைவு நாள்: மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது சிலை, படத்துக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:16 pm

DIN

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது சிலை, படத்துக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் எதிரே உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கும், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். படத்திற்கும் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, எம்.ஜி.ஆா். இளைஞரணி மாநில துணைச் செயலா் சீனிராஜ், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், வினோபாஜி, அய்யாத்துரைப்பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதுபோல, கடம்பூா், கயத்தாறு, கழுகுமலை மற்றும் சங்கரன்கோவில் தொகுதிக்கு உள்பட்ட இளையரசனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினா் எம்.ஜி.ஆா். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்செந்தூரில் அதிமுக நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன் தலைமையில், ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன் எம்.ஜி.ஆா். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அ.ம.மு.க. சாா்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

உடன்குடி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் த.தாமோதரன் தலைமை வகித்து எம்ஜிஆா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக சாா்பில் பெரியதாழையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆா் படத்துக்கு ஒன்றிய அதிமுக செயலா் அச்சம்பாடு த. சௌந்தரபாண்டி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நாசரேத்தில் நகர அதிமுக செயலா் கிங்ஸிலி தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆறுமுகனேரியில் அதிமுக நகரச் செயலா் ரவிச்சந்திரன் தலைமையில் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.