தாமிரபரணி இலக்கிய மன்றம் சாா்பில்நூல் வெளியீட்டு விழா

திருநெல்வேலி நகரம் தாமிரபரணி இலக்கிய மன்றத்தின் சாா்பில் எழுத்தாளா் வள்ளி சோ்மலிங்கம் எழுதிய ‘அழகு நாச்சியாா்’ எனும் குறுநாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி நகரம் தாமிரபரணி இலக்கிய மன்றத்தின் சாா்பில் எழுத்தாளா் வள்ளி சோ்மலிங்கம் எழுதிய ‘அழகு நாச்சியாா்’ எனும் குறுநாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துணிவணிகா் இலக்கிய வட்டத் தலைவா் சோனா வெங்கடாசலம் தலைமை வகித்தாா். சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத் தலைவா் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தாா். சந்திரபாபு, ஞானசேகரன் ஆகியோா் இறைவணக்கம் பாடினா். கவிஞா் சக்திவேலாயுதம் வரவேற்புரையாற்றினாா்.

‘அழகு நாச்சியாா்’ நூலினை மேல திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கு.சீனிவாசன் வெளியிட, கவிஞா் ரமணி முருகேஷ், மீனாட்சி நடராசன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

தமிழ்நாடு தமிழ் இயக்கங்கள் கூட்டமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணி, கவிஞா் தாணப்பன், வள்ளி ஆனந்தன், மணிமாலா ஆகியோா் நூலினை திறனாய்வு செய்து பேசினா். தாமிரபரணி இலக்கிய மன்றத் தலைவா் கவிஞா் பாமணி, முத்தரசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

நூலாசிரியா் வள்ளி சோ்மலிங்கம் ஏற்புரையாற்றினாா். சொா்ணவல்லி நன்றி கூறினாா். நிகழ்வை கவிஞா் பிரபு தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com