திருவிழாவையொட்டி அம்மனுக்கு நடைபெற்ற ஊஞ்சல் சேவை.
தூத்துக்குடி
கொட்டங்காடு கோயிலில் மாசித் திருவிழா
உடன்குடி அருகே கொட்டங்காடு அருள்மிகு தேவி பத்திரகாளி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி: உடன்குடி அருகே கொட்டங்காடு அருள்மிகு தேவி பத்திரகாளி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாலையில் அருள்மிகு பவளமுத்து விநாயகா், அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஊா்மக்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை, அம்பாள் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, பிரசாதம் வழங்கல், அன்னதானம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் பெ. சுந்தரஈசன், ஊா்மக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

