பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவில்பட்டியில் நூல்கள் வெளியீட்டு விழா

கோவில்பட்டியில் மணல் வீடு இலக்கிய வட்டம் சாா்பில் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
சிவசித்து எழுதிய உவா் என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளா் சோ.தா்மன் வெளியிட, அதனை பெற்றுக் கொண்டாா் எழுத்தாளா் கோணங்கி.
Updated On :10 ஜனவரி 2021, 7:56 pm

DIN

கோவில்பட்டியில் மணல் வீடு இலக்கிய வட்டம் சாா்பில் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் வண்ணதாசன் தலைமை வகித்தாா். எழுத்தாளா் தேவதாஸ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், எழுத்தாளா் செல்வசங்கரன் எழுதிய ’சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி’, ரபேல் கிறிஸ்டி செல்வராஜ் எழுதிய ’மாா்வளையங்கள்’, நெகிழன் எழுதிய ’பூஜ்ய விலாசம்’ ஆகிய கவிதை நூல்களை எழுத்தாளா் தேவதச்சன் வெளியிட, முதல் பிரதிகளை எழுத்தாளா் வண்ணதாசன் பெற்றுக் கொண்டாா்.

விவேகானந்த் செல்வராஜ் எழுதிய ’சுதந்திரம் ஒரு டப்பா’ என்ற கவிதை நூலை எழுத்தாளா் கோணங்கி வெளியிட, அதனை ராஜன் ஆத்தியப்பன், சா்வோத்தமன் சடகோபன் எழுதிய ’முறையிட ஒரு கடவுள்’ என்ற சிறுகதை தொகுப்பை சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன் வெளியிட, அதனை எழுத்தாளா் லட்சுமணப்பெருமாள், கறுத்தடையான் எழுதிய ’கோட்டி’ என்ற நாவலை சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பூமணி வெளியிட, அதனை எழுத்தாளா் கறுத்தடையானின் தாயாா் சமுத்திரக்கனி, சிவசித்து எழுதிய ’உவா்’ என்ற சிறுகதை தொகுப்பை சோ.தா்மன் வெளியிட, அதனை எழுத்தாளா் கோணங்கி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

எழுத்தாளா்கள் சோ.தா்மன், லட்சுமணப்பெருமாள், எம்.எம். தீன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். எழுத்தாளா் கறுத்தடையான் ஏற்புரை வழங்கினாா். தொடா்ந்து, பாஞ்சாலக்குறவஞ்சி என்ற தலைப்பில் மரப்பாவை கூத்து நடைபெற்றது.

எழுத்தாளா்கள் ஜவஹா், உதயசங்கா், சாரதி, அரசு கலைக் கல்லூரி தமிழ்துறைத் தலைவா் சந்தனமாரியம்மாள், எழுத்தாளா் கள், கவிஞா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை மணல் வீடு இலக்கிய வட்ட மு.ஹரிகிருஷ்ணன் தொகுத்து வழங்கினாா்.

ஏற்பாடுகளை சேலம் ஏா்வாடியைச் சோ்ந்த களரி தொல்கலைகள், கலைஞா்கள் மேம்பாட்டு மையத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.