ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜன. 15, 26, 28 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 15, 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:52 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 15, 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், திருவள்ளுவா் தினம் (ஜன. 15), குடியரசு தினம் ( ஜன. 26) மற்றும் வள்ளலாா் நினைவு நாள் (ஜன. 28) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.