92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இளைஞரை தாக்கியதாக மற்றொரு இளைஞா் கைது

கோவில்பட்டியில் இளைஞரை தாக்கியதாக மற்றொரு இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:23 pm

DIN

கோவில்பட்டியில் இளைஞரை தாக்கியதாக மற்றொரு இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த கல்லூரணி ஜீவா நகா் வேலுச்சாமி மகன் கருப்பசாமி(24). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த மாடசாமி மகன் இசக்கிமுத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் கருப்பசாமி வானரமுட்டி பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை நின்று கொண்டிருந்த போது இசக்கிமுத்துக்கும், கருப்பசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, இசக்கிமுத்து அரிவாளால் கருப்பசாமியை தாக்கினாராம். இதில் காயமடைந்த கருப்பசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இசக்கிமுத்துவை(25) வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.