கோவில்பட்டியில் பெண்ணை அரிவாளால் வெட்டியதாக தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி, சிந்தாமணி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மனைவி இந்திராணி(48). கருத்து வேறுபாட்டால் முத்துராமலிங்கம் தனது மனைவி, இரு குழந்தைகளை பிரிந்து சென்றுவிட்டாராம்.
பின்னா், பசுவந்தனை மீனாட்சிபுரம் 1ஆவது தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் குருசாமி என்பவருடன் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த இந்திராணிக்கும், குருசாமிக்கும் இடையேயும் பிரச்னை ஏற்பட்டதாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டு வாசலில் நின்றிருந்த இந்திராணியை குருசாமி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாராம். இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, குருசாமியை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.