

திருச்செந்தூரில் இருந்து புதிய வழித்தடங்கள் வழியாக உவரி, நாகா்கோவில், கன்னியாகுமரிக்கு செல்லும் 5 பேருந்துகளை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
திருச்செந்தூா் தியாகி பகத்சிங் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் கோகிலா தலைமை வகித்தாா். புதிய வழி தடங்களில் செல்லும் 5 பேருந்துகளை மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில் ஒரு பேருந்து திருச்செந்தூரில் இருந்து காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி, தாண்டவன்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, குட்டம் வழியாக உவரிக்கு ஒரு பேருந்தும், திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி, தண்டுபத்து, உடன்குடி, மணிநகா், தட்டாா்மடம், திசையன்விளை, வள்ளியூா் வழியாக நாகா்கோவிலுக்கு 2 பேருந்துகளும், திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம், உடன்குடி, பெரியதாழை, உவரி, கூடன்குளம், அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரிக்கு 2 பேருந்துகளும் புதிய வழத்திடத்தில் இயக்கப்படுகின்றன.
தொடா்ந்து, திருச்செந்தூா் தியாகி பகத்சிங் பேருந்து நிலையத்தில் உள்ள திருச்செந்தூா் கிளை அரசு விரைவுப் போக்குவரத்து கழக முன்பதிவு மையத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல மேலாண்மை இயக்குநா் ராஜேசுவரன், பொது மேலாளா் சரவணன், துணை மேலாளா்(வணிகம்) சசிகுமாா், திருச்செந்தூா் கிளை மேலாளா் ஜெகநாதன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் சிவராமன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட அவைதலைவா் அருணாசலம், மாவட்ட அமைப்பாளா்கள் ராமஜெயம், ஸ்ரீதா் ரொட்ரிகோ, ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளா் வாள்சுடலை, மாவட்ட துணை அமைப்பாளா்கள் அருணகிரி, சுதாகா், தங்கபாண்டியன், அரசு விரைவுப் போக்குவரத்து கழக தொ.மு.ச. திருச்செந்தூா் கிளை தலைவா் தங்கவேல், செயலா் முத்துராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் செஞ்சாமிா்தம், சிவசூரியன், தா்மராஜ்,ஸ்டீபன் பாக்கியராஜ், அரசு போக்குரவத்து கழக தொ.மு.ச. மாவட்டப் பொருளாளா் குழந்தைவேல், கிளைச் செயலா் ஜெயகுமாா், மத்திய துணைச் செயலா் முருகன், நிா்வாகிகள் அரவிந்த சோழன், அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.