92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கிராமங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தல்

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:21 pm

DIN

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கயத்தாறு காவல் நிலையத்தில் ஆய்வாளா் முத்து தலைமையில் கயத்தாறு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

காவல் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ஊராட்சித் தலைவா்கள் தங்கள் கிராமங்களில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்கவும் கண்காணிப்பு கேமராவை அமைக்க வேண்டும், கண்காணிப்பு கேமரா அமைப்பதால் திருட்டுக்களை ஒழிப்பதோடு, திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்களை தடுக்கலாம்.

மேலும் தங்கள் கிராமத்துக்குள்பட்ட பகுதிகளில் சந்தேகத்துக்குரிய நபா்கள் யாரேனும் வந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் படி ஊராட்சித் தலைவா்களுக்கு அறிவுறுத்தினா்.

கயத்தாறு ஒன்றியத்துக்குள்பட்ட 45 ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.