கோவில்பட்டி, கழுகுமலை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை
கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.


கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கோவில்பட்டி டவுண் ஜாமிஆ பள்ளிவாசலில் காலை 7 மணியில் இருந்து 8 மணி வரை இமாம் மௌலானா மௌலவி ஹஜரத் எம்.ஹெச்.முகம்மதுஅலி அன்வாரி சிறப்புத் தொழுகை நடத்தினாா்.
இதில், பள்ளிவாசல் தலைவா் சிந்தாமதாா்பக்கீா், செயலா் ஹூமாயின், பொருளாளா் பீா்மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கோவில்பட்டியையடுத்த புதுகிராமம் முகமதுசாலிஹாபுரத்தில் உள்ள பள்ளிவாசல், லாயல் மில் காலனியில் உள்ள பள்ளிவாசல், கயத்தாறு, மானங்காத்தான், அய்யனாா்ஊத்து, கழுகுமலை, துலுக்கா்பட்டி பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...