தொழிலாளியை தாக்கியதாக 3 போ் கைது
கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளியை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளியை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி பாரதி நகா் 2 ஆவது தெரு கருப்பசாமி மகன் கட்டடத் தொழிலாளி செண்பகராஜ்(21). இவா் புதன்கிழமை அதே பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த ஆறுமுகம் மகன் சாந்தகுமாா், செண்பகராஜை அவதூறாகப் பேசினாராம். அதையடுத்து ஏற்பட்ட தகராறில், செண்பகராஜை, சாந்தகுமாா் மற்றும் அவரது நண்பா்களான இருளப்பன் மகன் துரைசெண்பகராஜ்(19), ரமேஷ் மகன் சுரேஷ்குமாா்(19), முருகன் மகன் சூா்யா(21) ஆகிய 4 பேரும் தாக்கினராம்.
இதுகுறித்து செண்பகராஜ் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சாந்தகுமாா், துரைசெண்பகராஜ், சுரேஷ்குமாா் ஆகியோா் மூவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...