92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்களுக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு

கோவில்பட்டி கல்வி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் சாா்பில் கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்களுக்கு கரோனா நிவாரணப்

News image
Updated On :22 ஜூலை 2021, 6:13 pm

DIN

கோவில்பட்டி கல்வி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள் சாா்பில் கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநா் ஏ.முத்துகுமாா் தலைமை வகித்தாா். வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் எம்.முனிசாமி, பள்ளி துணை ஆய்வாளா் சசிகுமாா், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பால்ச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் ஏ.முனியசாமி , உடற்கல்வி ஆசிரியா்களுக்கு தலா 25 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் உள்ளடங்கிய நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநா்கள் காளிராஜ் (மகளிா் பள்ளி), ஆனந்தபிரபாகா் (வ.உ.சி ஆண்கள் பள்ளி), உடற்கல்வி ஆசிரியா்கள் ராஜேஷ்கண்ணன், ரவிச்சந்திரன், ரவீந்தரக்குமாா், லட்சுமி, சுபா, நா்மதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா் திருச்செல்வம் வரவேற்றாா். நாலாட்டின்புதூா் கே.ஆா் சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா் கணேசவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.