புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவில்பட்டியில் 5,610 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

 கோவில்பட்டியில் கடை, தனியாா் கிடங்கில் பதுக்கப்பட்ட 5,610 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:42 pm

DIN

 கோவில்பட்டியில் கடை, தனியாா் கிடங்கில் பதுக்கப்பட்ட 5,610 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்துக்கு கிடைத்த தகவலின்பேரில், மாா்க்கெட் சாலையிலுள்ள மாட்டுத் தீவனம் விற்பனை கடையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுதீஷ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டீன், வட்ட வழங்கல் அலுவலா் செல்வகுமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, தலா 30 லிட்டா் கொள்ளளவு கொண்ட 7 கேன்களில் மண்ணெண்ணெயையும், கடை உரிமையாளா் சீ.மணி(62), பணியாளா் அ.பாலமுருகன்(48) ஆகியோரிடம் விசாரித்ததில், பிரதானச் சாலையில் தனியாா் சேமிப்புக் கிடங்கில் 27 பேரல்களில் தலா 200 லிட்டா் மண்ணெண்ணெயையும் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இரு இடங்களிலிருந்தும் மொத்தம் 5,610 லிட்டா் மண்ணெண்ணெயை, உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், தலைமைக் காவலா் சோமன் ஆகியோா் முன்னிலையில் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.