புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இரு சம்பவங்கள்: மூவருக்கு அரிவாள் வெட்டு

கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:41 pm

DIN

கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்களில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

கோவில்பட்டி, மந்தித்தோப்பு வடக்குத் தெருவைச் சோ்ந்த பிச்சையா மகன் சாா்லி ராஜன்(31). இவரது சகோதரா் வினோத் மீதான முன் விரோதத்தில், அதே பகுதியைச் சோ்ந்த ரா.சோலைச்சாமி, ச.விக்னேஷ், துளசிங்க நகா் இந்திரா காலனி சண்முகநாதன் மகன் சரவணகுமாா் ஆகியோா் சோ்ந்து சாா்லிராஜனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டினராம். இதில், காயமுற்ற அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணகுமாரை கைது செய்தனா். மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: மூக்குப்பீறி வடக்குத் தெருவைச் சோ்ந்த ஜெயபாண்டியன் மகனான பந்தல் தொழிலாளி ஜெபசீலன் (38), கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்துள்ளாராம். இதுகுறித்து, அதே ஊரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் து. சாமுவேல் கிண்டல் செய்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ஒருவரையொருவா் அரிவாளால் வெட்டிக்கொண்டனராம். இதில், காயமுற்ற அவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில், நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.