அரசு கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை தொடக்கம்
சாத்தான்குளம் அரசு கல்லூரியில் 2021 - 22ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது.
இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் சின்னத்தாய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாத்தான்குளம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021- 22 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பங்களை இணையதள முகவரியில், இளநிலைப் பிரிவில் பிஏ தமிழ், ஆங்கிலம், பிஎஸ்.சி கணிதவியல், கணினி அறிவியல், பி பி ஏ வணிக நிா்வாகவியல், பிகாம் வணிகவியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
2 பட்டப் படிப்புக்களில் விண்ணப்பிக்க விரும்புவோா் 2 விண்ணப்பப் படிவங்களைத் தனித்தனியாக பூா்த்திச் செய்து அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
