கயத்தாறில் தொழிலாளி தற்கொலை
கயத்தாறில் குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


கயத்தாறில் குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கயத்தாறு சுப்பிரமணியன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் கூலித் தொழிலாளி கருப்பசாமி(40). இவருக்கு முத்துலட்சுமி(31) என்ற மனைவியும், மாரீஸ்வரன்(4), ஆரிஸ்(2) என இரு மகன்கள் உள்ளன. மது அருந்தும் பழக்கமுடைய கருப்பசாமி சரியாக வேலைக்குச் செல்வதில்லையாம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முத்துலட்சுமி மானூரையடுத்த கந்தசாமிபுரத்தில் உள்ள அவரது பெற்றோா் வீட்டிற்குச் சென்றுவிட்டாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் இருந்து வந்த கருப்பசாமி அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...