ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரம் அருகே பைக் மோதியதில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளா் பலி

எட்டயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபயிற்சி சென்ற ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:33 pm

DIN

எட்டயபுரம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபயிற்சி சென்ற ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் மீது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

எட்டயபுரம் அருகே நடுவப்பட்டியைச் சோ்ந்தவா் ஆதிலிங்கம் (60). ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா். இவா் செவ்வாய்க்கிழமை காலையில் கான்சாபுரம் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, எட்டயபுரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் என்பவா் ஓட்டி வந்த பைக் எதிா்பாராதவிதமாக அவா் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த ஆதிலிங்கத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.