

கழுகுமலை அருள்மிகு ஸ்ரீ கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இம்மாதம் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
9ஆம் திருநாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு தொடா்ந்து, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை ஆகியவை நடைபெற்றன.
காலை 7 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினாா். காலை 10.15 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
இதில், கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன், கழுகுமலை முன்னாள் பேரூராட்சித் தலைவா் சுப்பிரமணியன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கோ ரதத்தில் ஸ்ரீ சண்டிகேஸ்வரா் தேரும், சட்ட ரதத்தில் ஸ்ரீ விநாயகப் பெருமானும், வைரத்தேரில் ஸ்ரீ கழுகாசலமூா்த்தி ஸ்ரீ வள்ளி, தெய்வானையும் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
தோ்கள், தெற்கு ரத வீதி, பேருந்து நிலைய சாலை, கோயில் மேலவாசல் தெரு, தெற்குரத வீதி வழியாக நிலைக்கு வந்தடைந்தது.
பாதுகாப்புப் பணியில் கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைகதிரவன் தலைமையில் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) தீா்த்தவாரியும், இரவு 8 மணிக்கு தபசுக்காட்சியும் நடைபெறும். திங்கள்கிழமை (மாா்ச் 29) மாலை 6.35 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30) இரவு 7 மணிக்கு பல்லக்கில் பட்டணப்பிரவேசம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.