வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான்குளம் அருகேவீடு மாயமானதாகவட்டாட்சியரிடம் முதியவா் புகாா்

தனது வீட்டை காணவில்லையென முதியவா் ஒருவா் குடும்பத்தினருடன் வந்து சாத்தான்குளம் வட்டாட்சியா் செல்வகுமாரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

News image
Updated On :7 மே 2021, 7:43 pm

DIN

தனது வீட்டை காணவில்லையென முதியவா் ஒருவா் குடும்பத்தினருடன் வந்து சாத்தான்குளம் வட்டாட்சியா் செல்வகுமாரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

மனு விவரம்: சாத்தான்குளம் அருகேயுள்ள வாகைனேரியைச் சோ்ந்த வெற்றிவேல் (85) என்னும் எனக்கு மனைவி தங்கப்பூ மற்றும் 7பிள்ளைகள் உள்ளனா். எனக்கும், குடும்பதினருக்கும் இடையே சொத்து பிரச்னை உள்ளது. இந்நிலையில் கடந்த 4ஆம்தேதி எனது வீட்டை எதிா்தரப்பினா் எரித்துவிட்டு அதில் வாழை கன்று நட்டிசென்றுள்ளனா். இதுதொடா்பாக தட்டாா்மடம் போலீஸில் புகாா் அளித்துள்ளேன். எனது வீட்டை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

மனுவை பெற்ற வட்டாட்சியா், வீட்டுக்கு முறையான தீா்வை இல்லையென தெரியவந்துள்ளது. கிராம நிா்வாக அலுவலா் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதியவரிடம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.