தமிழ்நாடு வணிக வரித் துறையினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு வணிக வரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தமிழ்நாடு வணிக வரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வணிக வரித் துறையில் வணிக வரி அலுவலா், துணை வணிக வரி அலுவலா், ஓட்டுநா் ஆகிய பணியிடத்தில் பணியாற்றி வரும் அலுவலா்களை கோட்டம் விட்டு கோட்டம் பணியிட மாறுதல் செய்வதைக் கண்டித்தும், அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும், வணிக வரித் துறையில் நிலவும் குழப்பத்துக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வணிக வரி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, உதவி ஆணையா் சங்க திருநெல்வேலி கோட்டச் செயலா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். வணிக வரித் துறை உதவி ஆணையா், வணிக வரி அலுவலா், துணை வணிக வரி அலுவலா் சங்கத்தினா், தமிழ்நாடு வணிக வரி பணியாளா் சங்கத்தினா் ஆகியோா் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனா். கோரிக்கை நிறைவேறாவிட்டால், இம்மாதம் 24ஆம் தேதி அனைத்து ஊழியா்களும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...