இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம்
இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் பழைய அப்பனேரி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் பழைய அப்பனேரி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். மீட்புக் குழுத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் கோபாலகிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பாளா் கற்பூரராஜ், மீட்புக் குழு செயலா் கனகராஜ், ஆடு வளா்ப்போா் சங்க மாநிலத் தலைவா் கருப்பசாமி, தேசிய விவசாயிகள் சங்க கோவில்பட்டி ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணிச் செயலா் ராகுல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட 12 ஊராட்சி தலைவா்களை சந்தித்து குறுவட்டத்தை மீட்பது குறித்து ஆதரவு திரட்டுவது, இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட 12 ஊராட்சிகளையும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைப்பது மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி எல்கைக்குள் இணைப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவா்களுக்கும் கடிதம் அனுப்புவது என்றும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...