ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒருங்கிணைந்த வேளாண்வளா்ச்சி திட்ட ஆய்வுக் கூட்டம்

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அயன்வடமலாபுரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 7:13 pm

DIN

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அயன்வடமலாபுரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ முகைதீன் தலைமை வகித்தாா். புதூா் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை துணை இயக்குநா் கோகிலா முன்னிலை வகித்தாா். கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவா் வரதராஜன் வரவேற்றாா்.

கூட்டத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தை அயன் வடமலாபுரத்தை மாதிரி கிராமமாக தோ்ந்தெடுத்து செயல்படுத்துவது, அப்பகுதியில் வேலி கருவை மரங்களை அகற்றுவது, பழச்செடிகள், மரக்கன்றுகள், எலுமிச்சை உள்ளிட்ட செடிகளை நடவு செய்வது, ஆழ்துளைக் கிணறு, சூரிய ஒளி மின்சாரம் அல்லது மின் இணைப்பு கொடுப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் வேளாண் பொறியியல் துறை அலுவலா்கள் பிரசாந்த் குமாா், தோட்டக்கலைத் துறை அலுவலா் மகாராஜன், வேளாண்மை அலுவலா் ராமன், உதவி வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.