தடகளம்: சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாவட்ட தடகளப் போட்டியில் சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா், மாணவிகள் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

மாவட்ட தடகளப் போட்டியில் சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா், மாணவிகள் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாவட்ட தடகளப் போட்டியில் இப்பள்ளி பிளஸ் 2 மாணவா்

எஸ். பொன்அரசன், 18 வயதிற்குள்பட்டோா் பிரிவில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளிலும்

முத­லிடம் பெற்று தங்கம் வென்றாா். இதேபிரிவில் பிளஸ் 1 மாணவி பி. அட்­லின் பிரிஷியஷ் உயரம் தாண்டுத­லில் வெள்ளிப் பதக்கம், பிளஸ் 2 மாணவா் டி. முத்து பிரசாந்த் குண்டு எறித­லில் வெண்கலப் பதக்கமும் பெற்றனா். 10ஆம் வகுப்பு மாணவா் ஆா், லோகேஷ், 16 வயதிற்குள்பட்டோா் பிரிவில் தடை தாண்டி ஓடும் போட்டியில் வெண்கலமும், 9ஆம் வகுப்பு மாணவா்

கே. நாகராஜன் 14 வயதிற்குள்பட்டோா் பிரிவு நீளம் தாண்டுத­லில் முத­லிடம் பெற்று தங்கம் வென்றாா். மேலும் 18 வயதிற்குள்பட்டோா் பிரிவில் பிளஸ் 2 மாணவி ஜெ. ஐஸ்வா்யா ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளாா்.

மாணவா், மாணவிகள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியா்கள் எஸ்.செல்வம், என்.மணிகண்டன் ஆகியோரை பள்ளி டிரஸ்டியும் டிசிடபிள்யூ நிறுவனத் தலைவருமான முடித்ஜெயின், மூத்த செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜி.ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் (நிதி) பி.ராமச்சந்தின், பள்ளி முதல்வா் ஆா். சண்முகானந்தன், துணை முதல்வா் எஸ்.அனுராதா, தலைமை ஆசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா், நிா்வாக அதிகாரி வி.மதன்,ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com