கைப்பந்து போட்டி: ஆலடிப்பட்டி அணி முதலிடம்
By DIN | Published On : 17th August 2021 01:31 AM | Last Updated : 17th August 2021 01:31 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டியையடுத்த கழுகுமலை அருகே நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் தென்காசி மாவட்டம் ஆலடிப்பட்டி அணியினா் முதலிடத்தை பிடித்தனா்.
கழுகுமலையையடுத்த கரடிகுளத்தில் ஊா் பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் சாா்பில் இரு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த 42 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் தென்காசி மாவட்டம் ஆலடிப்பட்டி அணியினா் முதலிடத்தையும், புளியங்குடி அணியினா் 2 ஆம் இடத்தையும், 3 ஆம் இடத்தை ஆலடிப்பட்டி அணியும், 4 ஆம் இடத்தை கரடிகுளம் அணியும் பிடித்தனா்.
கோவில்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினா். இதில், முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், சுழற்கோப்பை, 2 ஆம் பரிசாக ரூ. 7 ஆயிரம், சுழற்கோப்பை, 3 ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம், சுழற்கோப்பை, 4ஆம் பரிசாக ரூ.3 ஆயிரம், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கயத்தாறு அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் வினோபாஜி, ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா், கழுகுமலை அதிமுக நகரச் செயலா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.