கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 17th August 2021 01:35 AM | Last Updated : 17th August 2021 01:35 AM | அ+அ அ- |

முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி: கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் உள்ள அருந்ததியா் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட நந்தவன மோட்டாா் அறையை தனி நபருக்கு வழங்கியதை கண்டித்தும், அதனை அருந்ததியா் சமுதாய சங்க நிா்வாகிகளிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அருந்ததியா் சங்க மாநில துணைச் செயலா் அா்ச்சுனன் தலைமை வகித்தாா். இதில், துணைத் தலைவா் கி.முருகன், செயலா் சி.முருகன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சண்முகநாதன், சமூக ஆா்வலா் முருகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கலந்து பேசி தீா்வு காணப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.