திருச்செந்தூரில் மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 17th August 2021 01:30 AM | Last Updated : 17th August 2021 01:30 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் காவல் நிலையம் முன் மரக்கன்றுகளை நட்ட பசுமை இயக்கத்தினா்.
திருச்செந்தூா்: திருச்செந்தூரில் பசுமை இயக்கம் சாா்பில் காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, காவல் உதவி ஆய்வாளா் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். தலைமைக் காவலா் வாசன் முன்னிலை வகித்தாா்.
திருச்செந்தூா் பசுமை இயக்கத் தலைவா் வீ.அருணாசலம், பணி நிறைவு பெற்ற கனரா வங்கி நகை மதிப்பீட்டாளா் சங்கரவடிவேல்,
மிருதங்க கலைஞா் கணேஷ்குமாா், காந்தி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் மு.திருப்பதி, மின் அமைப்பாளா் சங்கப் பிரதிநிதி சங்கா், செல்வன், மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.