பளு தூக்கும் போட்டி: கே.ஆா். கல்லூரி மாணவா் முதலிடம்
By DIN | Published On : 17th August 2021 01:34 AM | Last Updated : 17th August 2021 01:34 AM | அ+அ அ- |

மாணவா் ருத்ரமாயனுக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறாா் கல்லூரிச் செயலா் கே.ஆா்.அருணாச்சலம்.
கோவில்பட்டி: தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கோவில்பட்டி கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா் ருத்ரமாயன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நேதாஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்போா்ட்ஸ் சாா்பில் நடைபெற்ற போட்டியில், ருத்ரமாயன் ஜூனியா் அளவிலான 109 கிலோ எடை பிரிவில் நய்ஹற்ஸ்ரீட் & ஒங்ழ்ந் இல் மொத்தம் 331 கிலோ எடையை தூக்கி தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா். சீனியா் பிரிவில் தேசிய அளவில் 3 ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளாா்.
தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற இம் மாணவரை கல்லூரித் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, செயலா் கே.ஆா்.அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா், பயிற்சியாளா்கள் சொா்ணமுத்து, கணேசன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...