தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆணையம் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையம் விசாரணையை நீண்டித்து கொண்டே செல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஹென்றி திபேன் விசாரணை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
வழக்கறிஞர் ஹென்றி திபேன்.
வழக்கறிஞர் ஹென்றி திபேன்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையம் விசாரணையை நீண்டித்து கொண்டே செல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஹென்றி திபேன் விசாரணை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 29-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கிய நிலையில் 5-நாள்கள் நடைபெறும் விசாரணைக்காக 58-பேருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.  இதில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று ஆணையம் முன்பாக ஆஜராகி விளக்கமளிக்க வந்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தூத்துக்குடி துப்பாக்கி-சூடு சம்பவம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஆணையத்தின் விசாரணை முடிக்கப்படாமல் ஒவ்வொரு முறையும் ஆணையம் தரப்பில் கால நீட்டிப்பு கேட்டு வருகின்றனர். 

அதைபோல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 2018-ம் ஆண்டு பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி வழங்கியதாக கூறப்படும் தாசில்தார்கள் யாரையும் விசாரணை செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் விசாரணையை நீட்டித்து கொண்டே செல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஹென்றி திபேன் விசாரணை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார்.  மேலும் சிபிஐ நீதி அளிக்கவில்லை, நஷ்டஈடு நீதி கொடுக்காது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் சிறைக்கு சென்று இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com