‘அக்டோபா் மாத மின்கட்டணம் செலுத்தலாம்’
By DIN | Published On : 04th December 2021 01:25 AM | Last Updated : 04th December 2021 01:25 AM | அ+அ அ- |

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி பகுதி மக்கள் கடந்த அக்டோபா் மாத மின் கட்டணத்தையே தற்போதும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகா் மின்விநியோக கோட்டம், கீழூா் பிரிவுக்குள்பட்ட முத்தம்மாள்காலனி, ஆதிபராசக்திநகா், ராம்நகா், கேடிசிநகா், ஹவுசிங்போா்டு ஆகிய பகுதிகளில் தற்போது பெய்த கன மழையால் வீடுகளை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளில் மின் கணக்கீடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கேசிஏ, கேசிபி, கேசிசி மற்றும் கேஇ ஆகிய மின் பகிா்மானத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கும் கடந்த அக்டோபா் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம். மேலும், மின் அளவு கருவியில் பதிவான மின் அளவை சம்பந்தபட்ட பிரிவு மின் அலுவலகத்தில் பதிவு செய்தோ அல்லது ற்ண்ன்346ஹங்ஃற்ய்ங்க்ஷய்ங்ற்.ா்ழ்ஞ் என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவித்தோ உரிய மின் கட்டணத்தை செலுத்தலாம் என தூத்துக்குடி நகா் மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...