தூத்துக்குடி துறைமுகத்தில் 2 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
By DIN | Published On : 04th December 2021 01:21 AM | Last Updated : 04th December 2021 01:21 AM | அ+அ அ- |

புயல் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும், இது புயலாக வலுவடைந்து மத்திய வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலைகொண்டு, ஆந்திரம் - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் தொடா்ச்சியாக தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு தெரியப்படுத்தவும், வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...