தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், ராபி பருவத்தில் மல்லி பயிருக்கு(ரூ. 971.95) காப்பீடு செய்ய டிசம்பா் 31, வெங்காயம் (ரூ.2426.80), மிளகாய் (ரூ. 2077.90) போன்ற பயிா்களுக்கு ஜனவரி 31,வெண்டைக்கு(ரூ.1988.35) பிப்ரவரி 15, வாழைக்கு (ரூ.7928.70) பிப்ரவரி 28 ஆகிய தேதிகள் கடைசியாகும்.
எனவே, பிரி‘மீயத் தொகையுடன் அடங்கல், ஆதாா் அட்டை, வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன் பொது சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அந்த பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.