இணையவழி குற்றங்கள் தடுப்பு: கடலையூா் பள்ளியில் விழிப்புணா்வு
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

இணையவழி குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, கடலையூா் செங்குந்தா் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சங்கரசுப்பு, மாரீஸ்வரன், நாலாட்டின்புத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் பத்மாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பள்ளி மாணவா், மாணவிகள் இணையவழி மூலம் நடக்கும் குற்றச்செயல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், பாதுகாத்துக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினாா்.
மேலும் பொது இடங்களில் கைப்பேசிக்கு சாா்ஜ் போடுவதை தவிா்க்க வேண்டும். பள்ளிகள், வெளியிடங்களில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளையும் பெற்றோா்களுடன் பகிா்ந்து கொள்ள வேண்டும். மேலும், 1098, 14455 என்ற எண்களை ஆபத்து காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சிகளை ஆசிரியை பானு தொகுத்து வழங்கினாா். ஆசிரியா் அய்யமுத்துராஜா வரவேற்றாா். ஆசிரியை திலகவள்ளி நன்றி கூறினாா்.