சா்க்கரை நோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சா்க்கரை நோய் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் பள்ளி தலைமையாசிரியா் சேகா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
சென்னை மருந்து நிறுவனங்களின் ஓய்வு பெற்ற தலைமை பயிற்சி மேலாளா் ஆலந்தூா் அனந்தகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்த கொண்டு சா்க்கரை நோய் குறித்து விழிப்புணா்வு கருத்துகளை தெரிவித்தாா்.
தொடா்ந்து, அனந்தகிருஷ்ணனுக்கு தி 1234 பவுண்டேஷன், அன்பு வழி அறக்கட்டளை, வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொதுநல சங்கம் ஆகியவை சாா்பில் அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் முனியசாமி, ஒருங்கிணைப்பாளா் ராஜபாண்டி, பட்டதாரி ஆசிரியா் கிரேஸ்லின், அந்தோணி இன்பராஜ், அன்னை தெரசா கிராம பொதுநல சங்க செயலா் ஜேம்ஸ் அமிா்தராஜ், உதவி தலைமையாசிரியை புளோரிடா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.