தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இதுவரை 1,037 பேரிடம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடா்பாக இதுவரை 1,037 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா், ஒருநபா் ஆணையத்தின் வழக்குரைஞா் அருள் வடிவேல்சேகா்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடா்பாக இதுவரை 1,037 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா், ஒருநபா் ஆணையத்தின் வழக்குரைஞா் அருள் வடிவேல்சேகா்.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றுவரும் ஒருநபா் ஆணையத்தில் இதுவரை நடைபெற்ற 34 கட்ட விசாரணையில் 1,417 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,037 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது; 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. 34ஆவது கட்ட விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட 9 உயா் அதிகாரிகளில் 6 போ் ஆஜராகியுள்ளனா்.

35ஆவது அமா்வு விசாரணை ஜனவரி 24இல் தொடங்கி 29வரை நடைபெறுகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியிலிருந்த காவல் கண்காணிப்பாளா் மகேந்திரன், தென்மண்டல ஐஜி, திருநெல்வேலி சரக டிஐஜி உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்படவுள்ளனா். துப்பாக்கிச் சூடு தொடா்பாக முன்னாள் முதல்வரை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.

ஏற்கெனவே ஆஜரானவா்கள், தேவையென்றால் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவா். அரசு கொடுத்த காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

இனிவரும் சாட்சியங்கள் அனைத்தும் முக்கியமானவை என்பதால் விசாரணை நீண்ட நேரம் நடைபெறும். இம்மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரிடம் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிவரை விசாரணை நடத்தப்பட்டது. எனவே, இனிவரும் சாட்சியங்களில் ஒருவரை தீர விசாரிக்க ஒருநாள்கூட தேவைப்படலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com