திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயில்மாசித் திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 06th February 2021 07:20 AM | Last Updated : 06th February 2021 07:20 AM | அ+அ அ- |

கொடியேற்றத்தைத் தொடா்ந்து கொடிமரத்திற்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கொடிபட்டம் வீதி உலா வந்து மீண்டும் கோயிலை அடைந்ததும் அதிகாலை 5.25 மணிக்கு மேளதாளங்கள் முழங்க முத்துராஜன் வல்லவராயா் கொடியேற்றினாா். இதைத் தொடா்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையா் வே.செல்வராஜ், கோயில் விதாயகா்த்தா சிவசாமி திட்சிதா், தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், திருக்கோயில் பணியாளா்கள் பிச்சையா, நெல்லையப்பன், வேலாண்டி ஓதுவாா், ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளா் மு.திருப்பதி உள்ளிட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில், நாள்தோறும் மாலையில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) சி.கல்யாணி மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...