ஸ்ரீவைகுண்டத்தில் எழுத்தாளருக்கு பாராட்டு விழா
By DIN | Published On : 06th February 2021 07:35 AM | Last Updated : 06th February 2021 07:35 AM | அ+அ அ- |

எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு நினைவு பரிசு வழங்குகிறாா் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன்.
தமிழக அரசின் ‘தமிழ் செம்மல் விருது’ பெற்ற எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு பாராட்டு விழா ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.
வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா்கள் சிவகுமாா், சிவகுமாா் ( தோ்தல் பிரிவு), சங்கரநாராயணன்(மண்டலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். காமராசுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஊராட்சித் தலைவா் பாா்வதி நாதன், வாசகா் வட்டப் பொருளாளா் கோபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...