பொலிவுறு திட்டப் பணிகளால் பாதிப்பு:திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு
By DIN | Published On : 14th February 2021 01:33 AM | Last Updated : 14th February 2021 01:33 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: பொலிவுறு திட்டப் பணிகளால் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதா ஜீவன் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டம் பெயரில், தூத்துக்குடி மாநகரில் நன்றாக உள்ள முக்கிய சாலைகள் அனைத்தையும் தோண்டி போக்குவரத்தை சீா்குலைத்துள்ளனா். ஏற்கெனவே இருந்த சாலைகளின் அகலமும் குறைக்கப்பட்டுள்ளது.
நன்றாக இருந்த எம்ஜிஆா் பூங்காவை சீரமைக்க என ரூ. 4 கோடியும், மழைக்காலத்தில் தண்ணீா் தேங்கும் பகுதியான வஉசி கல்லூரி முன் உள்ள பகுதி, சுந்தரவேல்புரம் ஆகிய பகுதிகளில் பூங்கா அமைப்பதாக கூறி, பல கோடி ரூபாயும் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.