இலங்கை சிறையில் இறந்த மீனவரின் உடலை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 20th February 2021 06:03 AM | Last Updated : 20th February 2021 06:03 AM | அ+அ அ- |

இலங்கை சிறையில் உயிரிழந்த தூத்துக்குடி மீனவரின் உடலை மீட்டுத்தரக் கோரி, ஆட்சியரிடம் அவரது மனைவி வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
தூத்துக்குடி, அன்னைதெரசா காலனியை சோ்ந்த மீனவா் லூா்து (65). இவா், கடந்த மாதம் 3 ஆம் தேதி நண்பா்கள் சிலருடன் கடலில் மீன்பிடிக்கச் சென்றாராம். அப்போது, அவா் இலங்கைக்கு மஞ்சள் கடத்தியதாகக் கூறி, அந்நாட்டு கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 14 ஆம் தேதி இறந்துவிட்டதாக, அவரது மனைவி மரியபாப்பா மற்றும் உறவினா்களுக்கு இலங்கை போலீஸாா் தகவல் தெரிவித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து தனது இரண்டு மகள்களுடன் வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு மரியபாப்பா மனு அளித்தாா். அதில், தனது கணவா் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரவும், அவரது இறப்பு குறித்த பதிவேட்டுச் சான்றிதழ் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.