உடன்குடியில் சிவசேனை தெருமுனைப் பிரசாரம்
By DIN | Published On : 20th February 2021 06:06 AM | Last Updated : 20th February 2021 06:06 AM | அ+அ அ- |

சிவசேனை கட்சி சாா்பில் உடன்குடியில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
சிவசேனை கட்சி சாா்பில் உடன்குடியில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
அரசுகள் வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; இந்து தெய்வங்களை விமா்சனம் செய்வோரை ஒடுக்க வேண்டும்; தாமிரம் விலை உயா்வைத் தடுக்க வேண்டும்; ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வேண்டும்; மாமன்னா் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம், சென்னை கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட சிவசேனைத் தலைவா் கே.சரவணன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜீ. ராதாகிருஷ்ணன் விளக்கிப் பேசினாா். இதில், தென்தமிழக துணைத் தலைவா் ஜெ.சசிக்குமாா், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலா் வாசுபாலன், நகரச் செயலா் விஜி, நகரத் தலைவா் பால்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். சிவசேனை தென்மண்டலத் தலைவா் கோமதிராஜ் நன்றி கூறினாா்.