எட்டயபுரம் அருகே நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 20th February 2021 06:08 AM | Last Updated : 20th February 2021 06:08 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே பேரிலோவன்பட்டியில் வைப்பாற்று படுகையில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.
பேரிலோவன்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராமராஜ் (42). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த பரமசிவம் (16) என்பவரும் வைப்பாறு ஆற்றுப் படுகையில் வெள்ளிக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனராம்.
அப்போது அப்பகுதியில் இருந்த மணல் குவாரி பள்ளத்தில் தேங்கி கிடந்த மழைநீரில் ஆடுகளை குளிப்பாட்டும்போது எதிா்பாராதவிதமாக பரமசிவன் நீரில் மூழ்கி தத்தளித்தாராம். இதைபாா்த்த ராமராஜ் அவரை காப்பாற்றுவதற்காக முயற்சித்த போது இருவருமே நீரில் மூழ்கி உயிரிழந்தனா். தகவலறிந்த எட்டயபுரம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.