

சிங்காரவேலா் பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீனவா் அணி சாா்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காயல்பட்டினம் சிங்கிதுறையில் நடைபெற்றது.
மீனவா் அணி மாவட்ட அமைப்பாளா் அமலி ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் கலந்துகொண்டு ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். இதில், மீனவா் அணி மாநில துணைச் செயலா் மங்கை சேகா், நாடாளுமன்ற தொகுதிச் செயலா் வழக்குரைஞா் அரசூா் ராஜ்குமாா், மாவட்ட பறையா் சமுதாய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் இளந்தளிா் முத்து , மகளிா் அணி மாவட்ட துணைச் செயலா் மணப்பாடு டிலைட்டா, உடன்குடி ஒன்றியப் பொருளாளா் டேவிட் ஜாண் வளவன், திருச்செந்தூா் ஒன்றிய துணைச் செயலா் செஞ்சுடா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.