குரும்பூரில் மெகா கோலப் போட்டி
By DIN | Published On : 20th February 2021 06:07 AM | Last Updated : 20th February 2021 06:07 AM | அ+அ அ- |

பெண்ணுக்கு பரிசு வழங்குகிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்எம்எல்ஏ.
ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் குரும்பூா் அங்கமங்கலத்தில் நடைபெற்ற மெகா கோலப்போட்டியில் 1,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா்.
இதில், தலைவன்வடலி பிரவீணா, ‘நாசரேத் பிரம்மசக்தி, ஆத்தூா் மஞ்சு ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா். பரிசளிப்பு விழாவுக்கு ஒன்றிய திமுக செயலா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்று, முறைய ரூ.25,000, ரூ.20000, ரூ.15,000 என மூன்று பரிசுகளை வழங்கினாா். ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், உடன்குடி ஒன்றியச் செயலா் பாலசிங், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பிரம்மசக்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வழக்குரைஞா் பாக்கியராஜ் நன்றி கூறினாா்.