கழுகுமலையில் விவசாய சங்க ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 26th February 2021 07:53 AM | Last Updated : 26th February 2021 07:53 AM | அ+அ அ- |

கழுகுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் சங்கரலிங்கம் தலைமை வகித்தாா். கோவில்பட்டி வட்டத் தலைவா் லெனின்குமாா் முன்னிலை வகித்தாா். மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; 2018 - 2019ஆம் ஆண்டில் விடுபட்ட விவசாயிகளுக்கும், 2019-2020இல் அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, வட்டச் செயலா் சிவராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதவிச் செயலா் கருப்பசாமி, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வீராசாமி, சுப்புராஜ், பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...